தேசத்துரோக சட்டம் : மக்களிடம் கருத்து கேட்கும் சட்ட ஆணையம்


தேசத்துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய இந்திய சட்ட ஆணையம் மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் வக்கீலுமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாகாராஷ்டிர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு தேசிய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் சிலர் குற்றம்சாட்டியிருந்தனர். 

இந்நிலையில் தேசத்துரோக சட்டப்பிரிவு 124ஏ குறித்து மறுபரிசீலனை மற்றும் மக்கள் கருத்து கேட்பதாக இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

124ஏ சட்டப்பிரிவு :

இந்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் அரசுக்கு எதிராக வெறுப்பையும் விரோத எதிர்ப்பை தூண்டி விடும் பேச்சு. தேசத்துரோக மற்றும் அரசுக்கு எதிரான எண்ணத்தை தூண்டும் வகையில் எழுதுவது. நாடகம் மற்றும் படம் அல்லது வேறு வகையில் தேசத்திற்கு எதிரான செயல்களை செய்வது உள்ளிட்டவை தேசதுரோக குற்றத்தின் சட்டப்பிரிவில் வருகிறது. இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதவும் விதிக்கபடும். அல்லது 3 ஆண்டுகள் சிறைக்காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும். 

ஆனால் அதேசமயம் ஜனநாயக மரபுக்ளின் அடிப்படையில், அரசின் நிர்வாக முறைகளைப் பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். அல்லது விமர்சிக்கலாம். அது குற்றம் அல்ல. 

இந்தச் சட்டம் தொடர்பாக தான், தற்போது இந்திய சட்ட ஆணையம் மக்கள் கருத்து கேட்டுள்ளது. அத்துடன் சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக கூறியுள்ள இந்திய சட்ட ஆணையம், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வது இந்தியா. இந்த நாட்டில், ஏன்? இன்னும் ஆங்கிலேயேர்காலத்தில் இந்தியர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவந்த 124ஏ சட்டத்தை பின்பற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் விவகாரங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனங்கள் மற்றும் தேசத்துரோகமாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS