அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு


கோவையில் இந்து அமைப்பின் நிர்வாகி வீரகணேஷ் என்பவர் கடந்த 1989ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். குனியமுத்தூர் ஆத்துப்பாலம் மயானத்தில் உள்ள வீரகணேஷ் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் திதிகொடுக்கும் நிகழ்ச்சியும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது.இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் , தடையை மீறி இந்து மக்கள் கட்சியினர் நேற்று அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் குப்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன்சம்பத் உட்பட 10 பேர் மீது இரு பிரிவுகளில் காவல் துறையினர்  வழக்கு பதிவுசெய்தனர்.அனுமதி இன்றி ஒன்று கூடுதல், அரசு அதிகாரியின் உத்திரவிற்கு கீழ் படிய மறுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS