அரியலூரில் 9 மயில்கள் உயிரிழப்பு: வேட்டையாட விஷம் வைக்கப்பட்டதா?


அரியலூர் அருகே விவசாய நிலத்தில் 9 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். 

அரியலூர் மாவட்டம் கல்லஞ்குறிச்சி கிராமத்தில் ரெங்கநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 9 மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 3 ஆண் மயில்கள், 6 பெண் மயில்கள் உயிரிழந்துள்ளன. விவசாய பொருட்களை மயில்கள் சேதப்படுத்தியதால் யாராவது விஷம் வைத்தார்களா? அல்லது மயில்களை வேட்டையாட இது போல் விஷம் வைக்கப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

POST COMMENTS VIEW COMMENTS