கிளிநொச்சியில் திடீர் பதற்றம்: ராணுவம் தேடுதல் வேட்டை!


இலங்கையில் கிளிநொச்சி மாட்டம்- பளை, கச்சார்வெளி பகுதியில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கச்சார்வெளி பகுதியில் ஏ9 சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து போலீசாரை குறி வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். சந்தேகத்திற்கிடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், அந்தப் பகுதியை நோக்கி, போலீசார் லைட் அடித்தனர். இதையடுத்தே போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்குள்ளவர்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS