விதிகளை மீறிய மதுபான பார்கள்.. 5 பேர் கைது


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், அரசு விதிமுறைகளை மீறி அதிகாலை முதலே மதுபான பார்கள் திறக்கப்பட்டதை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பகல் 12 மணிக்கு தான் மதுபான கடைகளையும், பார்களையும் திறக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், செஞ்சி நகர் பகுதியில், அரசு அனுமதி பெற்ற மதுபான பார்கள் அதிகாலை முதலே இயங்குவதாக புதியதலைமுறைக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மதுபான பார்களில் நாள் முழுவதும் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்துள்ளது. அதிகாலையிலேயே செயல்படும் டாஸ்மாக் மதுபான பார்கள் குறித்து புதிய தலைமுறை வெட்டவெளிச்சமாக உலகிற்கு அம்பலப்படுத்திது.

புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனின் உத்தரவு படி, சம்பந்தப்பட்ட பார் ஊழியர்கள், பிரேம்குமார், குமார், சேசு, வெங்கடேசன், சதீஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS