பழனியில் சண்டையை விலக்க வந்தவர் உயிரிழந்த பரிதாபம்‌


பழனியில் சண்டை போட்டுக்கொண்ட சகோதரர்களை விலக்கிவிடச் சென்றவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்‌.

பழனி அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பிரபு மற்றும் சுந்தரம். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதை கண்ட அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் இருவரையும் விலக்க சென்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பிரபுவும் சுந்தரமும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை சரமாரியாக குத்தியுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவகுமார் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS