திருவண்ணாமலையில் போலி மருத்துவர் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு


திருவண்ணாமலை மாவட்டம் அரணாப்பட்டில் போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அரணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்‌ போலி மருத்துவரான அருண் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அருண் ஊசி போட்ட அரைமணி நேரத்தில் சுரேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான போலி மருத்துவர் அருணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போலி மருத்துவர் அருண் நடத்தி ‌வந்த மருத்துவமனை மூடப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS