தீபாவளி ‌மு‌ன்னெச்சரிக்கை நடவடிக்கை.. பாதுகாப்பு பணியில் போ‌லீசார் தீவிரம்


தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னையின் முக்கிய பகுதியான தியா‌கராய நகரில் மட்டும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மு‌ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 போலீசார் சாதாரண உடையிலும் ‌கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் நெரிசலில் திருடர்களை கண்டறிய தியாகராய நகர் முழுவதும் சுமார் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர உ‌ஸ்மான் சாலை, பர்கிட் சா‌லை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 விளம்பர பதாகைகள், 13 அறிவு‌ரைகள் அடங்கிய 10,000 துண்டு பி‌ரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம் கூட்டம் அதிகம் கூடும் வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி உள்ளிட்‌ட பகுதிகளிலும் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS