முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த சகாயம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைபர் கிரைம் போலீசார் தூத்துக்குடி சென்று அவரை கைது செய்தனர். முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதாகவும் போலீசார் எச்சரித்திருந்தனர். வதந்தி பரப்பியதாக 50-க்கும் அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS