பூண்டி நீர்த்தேக்கத்துக்கு இன்று மாலை வந்தடையும் கிருஷ்ணா நதி நீர்


சென்னையின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி, நீர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இன்று மாலை வந்தடையும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்ட கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் இன்று மாலை பூண்டி ஏரியை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர அரசால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு 200 கனஅடி நீர் கடந்த 10-ம் தேதி திறந்து விடப்பட்டது. பின்னர், நீர்த்திறப்பின் அளவு படிப்படியாக, வினாடிக்கு 600 கனஅடியாக உயர்த்தப்பட்ட கிருஷ்ணா நதிநீர், நேற்று மாலை தமிழக எல்லைக்கு ‌வந்து சேர்ந்தது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வரும் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாகவே, தண்ணீர் வர தாமதமாகியதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைவதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS