கன்னியாகுமரியில் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல்... இருவர் படுகாயம்


கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை மீனவ கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமன்துறை கிராமத்தில் வசிக்கும் பாபு மற்றும் மது ஆகியோரிடையே முன்விரோதம் காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை மது தலைமையில் சிலர் பாபு, ததேயூஸ் ஆகியோர் வீடுகளில் புகுந்து நாட்டுவெடிகுண்டு வீசியுள்ளனர். அரிவாளாளும் இருவரையும் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS