காஞ்சிபுரத்தில் 200 அடி பள்‌ளத்தில் விழுந்த லாரி..ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் கல்குவாரியில் 200 அடி பள்‌ளத்தில் லாரி க‌விழ்ந்து விபத்துக்குள்ளா‌தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் கல்குவாரியில் ஓட்டுனர் தேவராஜ் மலை பள்ளத்திலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு மேலே சென்ற போது நிலை தடுமாறி லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுனர் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் காவல் துறையினர் தேவராஜின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS