கன்னியாகுமரியில் ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்


கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் வெடிமருந்து ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகாசியில் இருந்து கேரள மாநிலம் நெடுங்காடு மீன்முட்டி பகுதிக்கு வெடிமருந்துகள் எடுத்து செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அலுமினியம் பொடி, சல்பர் நைட்ரேட், சாண்டியம் நைட்ரோ போன்ற வெடிமருந்துகள் மொத்தம் ஆயிரம் கிலோ வரை இருந்ததால், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிமருந்துகளுக்கான ஆவணங்கள் முறையாக இருப்பினும், சந்தேகத்தின் அடிப்படையில் களியக்காவிளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS