நீலகிரி பழங்குடி மக்களை வாட்டும் ’சிக்கிள் செல் அனீமியா’ நோய்


நீலகிரியில் பழங்குடியின மக்களை சிக்கிள் செல் அனிமியா என்ற நோய் பாதித்து வருவது தொடர்ந்து வருகிறது

தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி மலைத் தொடரில் கோத்தர், இருளர், பனியர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடிகள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மக்கள் தொகை 100 கோடியில் இருந்து 120 கோடியாக உயர்ந்தபோதிலும், பழங்குடிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டவில்லை. நீலகிரியில் வாழும் பெரும்பாலான மக்கள் சிக்கிள் செல் அனிமியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோய் தலைவலி, மூட்டுவலி, பசியின்மை, நோய் எதிர்ப்பு சக்தியின்மை போன்றவற்றை உண்டாக்கி, இளம் வயதில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நீலகிரியில் வாழும் பழங்குடிகளில் 2 சதவீதம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிள் செல் அனிமியாவின் தன்மையை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்நோய்க்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து ஆதிவாசிகள் மருத்துவமனை இயக்குனர் விஜயக்குமாரிடம் கேட்டபோது‌, காலம் காலமாக இந்த நோயால் ஆதிவாசி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தாலும், அதனை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறினார். சிக்கிள் செல் அனிமியாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை நீடிக்க சத்து மாத்திரைகள், நீயூட்ரின் அதிகம் அடங்கி்ய உணவுகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS