கந்துவட்டி பிரச்னையால் தண்ணீர் கேனுக்குள் அடைக்கப்பட்ட சிறுமி


தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கைகால்களை கட்டி 200 லிட்டர் தண்ணீர் கேனுக்குள் வைத்து மூடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கழுகுமலையைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் பார்த்தசாரதி என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வசூலிக்க வந்தபோது, ஆனந்தியை பார்த்தசாரதி தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் பாக்கியலட்சுமி என்பவர் நேரில் பார்த்துள்ளார்.

இதையடுத்து, ஆனந்திக்கு ஆதரவாக பாக்கியலட்சுமி சாட்சியம் அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி, பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது மகள் உஷாவை மிரட்டியுள்ளார். பின்னர், உஷாவின் கை கால்களை கட்டி, அங்கிருந்த 200 லிட்டர் தண்ணீர் கேனுக்குள் வைத்து அடைத்துள்ளார்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி தரப்பில் கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS