குழந்தை உயிருடன் இருப்பது சந்தேகம் என்று திருப்பி அனுப்பப்பட்டவருக்கு ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை...


தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் குழந்தை உயிருடன் இருப்பது சந்தேகம் என்று கூறி திருப்பி அனுப்‌பப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.

கொட்டக்குடி மலைக்கிராமத்தைச் சேர்ந்த யுவஸ்ரீ என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்பூலன்சில் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாகவே அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், பணியில் இருந்த மருத்துவர்கள் தொப்புள் கொடி சுற்றியுள்ளதால் குழந்தை உயிருடன் இருப்பது சந்தேகமே எனக் கூறி, திருப்பி அனுப்பியுள்ளனர். வழியில் யுவஸ்ரீக்கு பிரசவ வலி ஏற்பட, 108 ஆம்பூலன்ஸ் பணியாளர்களே பிரசவம் பார்த்து பெண்குழந்தை பிறந்துள்ளது. மீண்டும் போடி அரசு மருத்துவமனையிலேயே தாயும் சேயும் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர். உரிய மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட்டால் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS