சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை


சென்னை பெருங்குடி பகுதியில் 3 வயது சிறுமியை பக்கத்து வீட்டு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பெருங்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரது 3 வயது மகள் திடீரென காணாமல் போனார். சிறிது நேரத்துக்குப் பின்னர், அவரது அழுகுரல் கேட்டு, பக்கத்து வீட்டிற்கு குழந்தையின் தாயார் சென்று பார்த்துள்ளார். அப்போது, விஜய் என்பவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில், துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை திருவல்லிக்கேணி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியம் காட்டியதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

POST COMMENTS VIEW COMMENTS