சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் தொலைப்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அவர், கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இல்லாவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், தொலைப்பேசி வாயிலாக வந்த மிரட்டல் வெறும் போலி எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS