தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலம்... விவசாயிகள் வேதனை..!


திருவையாறு அருகே கண்டியூர் கிராமத்தில் கருகி வரும் நாற்றாங்காலுக்கு தண்ணீரை காசுகொடுத்து வாங்கி பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதை நம்பி சம்பா சாகுபடி செய்திருந்த விவசாயிகள் தற்போது வாய்க்காலில் நீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் முறையாக வழங்க மறுப்பதால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையில் பெரிதும் வஞ்சிக்கப்படுவது விவசாயிகளே. இதனால் தான் தமிழகத்திற்கு இத்தகைய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS