கள்ளத்தோணியில் தமிழகம் வந்த இலங்கை அகதி கைது


இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வந்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டார்.

கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாக அவரை ‘கியூ’ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று தெரியவந்தது. மேலும், இலங்கை ராணுவத்தால் தான் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி தப்பிவந்ததாகவும் கூறினார். தனது மனைவி மற்றும் குழந்தைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள் அதனால் தான் இந்தியா வந்ததாக அவர் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS