குளிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்.. குளத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு


காஞ்சிபும் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் கோயில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

நீலாங்கரை பகுதியை சேர்ந்த விக்னேஷ், திருவான்மியூரை சேர்ந்த மற்றொரு விக்னேஷ், பொன் பாஸ்கர், விஷ்ணுவர்தன், உள்பட 5 பேர் கவுரியம்மமன் கோயில் குளத்தில் குளிப்பதற்கு சென்றனர். அப்போது, நீலாங்கரை விக்னேஷ், பொன்பாஸ்கர் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றபோது, திடீரென நீரில் மூழ்கினார்கள்.

அவர்களை காப்பாற்றுவதற்கு மற்ற இருவரும் முயற்சித்தனர். அவர்களும் நீரில் தத்தளித்ததைக் கண்ட பொதுமக்கள், 5 பேரையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் நீலாங்கரை விக்னேஷ், பொன்பாஸ்கர், விஷ்ணுவர்தன் ஆகியோர் உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் மீட்கப்பட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS