முதலமைச்சர் குணமடைய திருவாரூரில் 12,000 பால் குடம்!


முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி திருவாரூரில் பால் குடம் எடுத்து அதிமுகவினர் வழிபாடு நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம்பெற தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கடவுள் வழிபாடு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் திருவாரூரில் அமைச்சர் காமராஜர் தலைமையில் பால் குட ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மேல வீதியில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பால் குடம் எடுத்து வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக தியாகராஜசாமி கோயிலில் உள்ள இராகு கால துர்க்கை அம்மன் கோயிலை அடைந்தனர். இதனை தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை‌த்திலும் பால் குட ஊர்வலம் நடந்தது. சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து தொடங்கிய பால் குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கண்ணணூர் மாரியம்மன் கோயிலில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பால் குட ஊர்வலத்தில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மக்களவை உறுப்பினர்கள் செல்லகுமார சின்னையா, சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS