விழுப்புரத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படைகள் அமைப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படை‌களை காவல்துறை அமைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டும், குற்றங்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயர் 4 தனிப்படைகளை அமைத்துள்ளார். 50 காவல்துறையினர் கொண்ட இந்த 4 தனிப்படைகளுக்கும் குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS