பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்


‌பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல்‌, டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 34 காசும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் 37 காசும் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை மட்டும் ஐந்து முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலை‌உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். பன்னாட்டுச் சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி, சாதாரண மக்கள் மீது சுமையை ஏற்றுவது கண்டனத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.

பெட்ரோல்‌, டீசல் விலை உயர்வால், உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ள வைகோ, விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போய் மக்கள் அல்லல் படும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS