இன்று உலக உணவு தினம்.. பசியாற்ற செயல்படும் 'சேலம் உணவு வங்கி'


உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16-ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக, சேலத்தில், தன்னார்வ அமைப்பு ஒன்று ஆதரவற்றவர்களின் பசியை போக்க தம்மால் இயன்றதை செய்து வருகிறது. ‘சேலம் உணவு வங்கி’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில், 90 தன்னார்வலர்கள் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில், ஏழ்மையில் பரிதவிப்பர்களுக்கு இவர்கள் நாள்தோறும் இலவசமாக‌ உணவளித்து வருகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உடல்நலம் குன்றும்போது தன்னலம் கருதாமல் மருத்துவ சிகிச்சைக்கும் உதவி புரிகின்றனர்.

அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நிலையைக் கருத்தில் கொண்ட அந்த அமைப்பின் ஓராண்டு செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS