திருச்சி அருகே பால் லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பால் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

காட்டுபுத்தூரில் இருந்து திருச்சி நோக்கி ஆவின் பால் ஏற்றி வந்த லாரி திருவாசி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வாகனத்தில் பயனித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.

உயிரிழந்த இருவரும் மணல் குவாரியில் பணியாற்றிய சக்திவேல் மற்றும் மாரியப்பன் என்பது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS