சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவுர்ணமி தினத்தன்று சதுரகிரி மலையின் மீது அமைந்துள்ள சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி நாளில் இங்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று பவுர்ணமி என்பதால் பக்தர்கள் குவிந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை மீது செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்திலேயே காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில், சதுரகிரி மலைக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் பலர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இவர்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறை, கயிறு கட்டி மீட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS