எழும்பூர் அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் உயிரிழப்பு.. ஸ்டாலின் கண்டனம்


சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்தனர். மேலும், காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி கீர்த்தனா (11) நேற்று இரவு இறந்தார். இதனால் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், செயலற்ற அரசு, சென்னையின் சுகாதார சீர்கேடு,மருத்துவத்துறையின் அலட்சியம் காரணமாக, எழும்பூரில் 4 குழந்தைகள் உயிரிழந்தது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS