கலாம் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்ட விவேக்


முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் பிறந்தநாளில் சென்னை தனியார் பள்ளி ஒன்றில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார்.

அப்துல்கலாமின் பிறந்தநாளான இன்று காலை10 மணிக்கு தனியார் பள்ளி ஒன்றில் அவரது சிலையைத் திறந்துவைத்து, மரக்கன்றுகளை விவேக் நட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்களின் வரவேற்பிற்கு கலாம் அய்யாவின் புனிதமே காரணம் என்று தெரிவித்துள்ளார். கலாமின் சிலையை பார்க்கும் போது உணர்ச்சி வசப்படுவதாகவும், இது கலாம் காலம் என்பதை உணர்வதாகவும் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளை ஒட்டி தனியார் பள்ளி ஒன்றில் கலாமின் சிலையை திறந்து வைத்து, 25,000 மரக்கன்றுகளை நடவுள்ளதாக நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார். அப்துல் கலாமை கடந்த 2010–ம் ஆண்டு நடிகர் விவேக் சந்தித்தார். அப்போது, மரக்கன்றுகள் நடும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு அவரிடம் அப்துல்கலாம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் ’கிரீன் கலாம்’ என்ற அமைப்பு மூலமாக நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS