தாயை பிரிந்து பரிதவிக்கும் பிறந்து 10 நாளே ஆன குட்டி யானை


கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானைக்கு, முதுமலை யானைகள் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த குட்டி யானையை, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதனால், நேற்று நள்ளிரவில் குட்டி யானை முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

குட்டி யானை பிறந்து 10 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் என்பதால் தாய்ப்பால் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் தொற்று ஏற்படாத வகையில் தனி அறையில் வைத்து குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS