முதலமைச்சர் விரைவில் குணம்பெற முள்படுக்கையில் தியானம்


முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி மதுரையில் இருளாண்டி என்பவர் முள்படுக்கை மீது படுத்து தியானம் செய்து வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி மதுரை 81ஆவது அதிமுக வட்ட ஓட்டுநர் அணி இணைச் செயலாளரான இருளாண்டி, பேச்சியம்மன் படித்துறையில் முள்படுக்கை தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

காக்கா முள், இலந்தை முள், குட முள், கொடிக்காய் முள், கற்றாழை முள் என 5 வகையான முட்களால் ஆன படுக்கையில் தொடர்ந்து 24 மணி நேரம் இந்த தியானம் நடைபெறவுள்ளதாக இருளாண்டி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார்.

POST COMMENTS VIEW COMMENTS