எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 3 குழந்தைகள் உயிரிழப்பு


சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் இரண்டு குழந்தைகள் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த பாஹிமா(8), முகமது(6). இவர்கள் இருவரும் சகோதர சகோதரிகள் ஆவர். மதுரவாயல் பகுதியை சேர்ந்த லக்சிகா ஏஞ்சல் என்ற 6 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லையென்றும், ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் அக்கறையுடன் சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் எனவும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவமனையில் போதிய சுகாதாரம் இல்லை எனவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவ அதிகாரி, டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழக்கவில்லை என்றும், வைரஸ் காய்ச்சலே காரணம் என்றும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS