முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி.. இதுவரை 7 பேர் கைது


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் இன்று செய்யப்பட்டுள்ளார். எனவே இதுவரை இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், அவ்வாறு வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஏற்கெனவே முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

சமூக வலைதளங்களில் இதேபோன்று அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக, 52 வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அவதூறு பரப்புபவர்களின் பதிவுகளை நீக்குவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்கும், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS