முதலமைச்சர் நலம் பெற 30,000 பேர் பால்குடம்!


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெ‌ற வேண்டும் என அதிமுகவினர் பால்குடம் எடுத்து, தீச்சட்டி ஏந்தி,‌ அலகு குத்தி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22- ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் விரைவில் குணமடையதமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோயிலில் கடந்த ஒருவாரமாக விரதம் மேற்கொண்ட தேனி மாவட்ட அதிமுகவினர், இன்று வேண்டுதல்களை நிறைவேற்றினர். உப்புக்கோட்டை விலக்கில் இருந்து 30,000-க்கும் அதிகமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்குச் சென்றனர். சிலர் மொட்டை அடித்தும் சிறப்பு பூஜை நடத்தினர்.

இதில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அலகு குத்தி வழிபாடு நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜக்கையன், கதிர்காமு ஆகியோர் தீச்சட்டி ஏந்திச் சென்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS