தெரு நாய்க்கு பார்வை பறிபோனது: உலக்கையால் தாக்கியவர் மீது வழக்கு


சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உலக்கையால் அடித்ததில் தெரு நாய்க்கு இடது கண் பார்வை பறிபோனதுடன், காலும் உடைந்தது.

சிட்டி என்ற அந்த நாயை விருகம்பாக்கம் இந்திரா நகரில் வசித்து வந்த வேலு என்பவர் பராமரித்து வந்துள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்பு நெற்குன்றத்தில் உள்ள மேட்டுக்குப்பம் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார். அவ்வப்போது விருகம்பாக்கம் செல்லும் போது வேலு, சிட்டி நாயை பார்த்து வந்துள்ளார். வியாழக்கிழமை, வேலு குடியிருந்த வீட்டின் அருகே குடியிருப்பவர்களிடம் இருந்து போன் வந்துள்ளது.

அப்போது அவர்கள் வேலுவிடம், விருகம்பாக்கம் இந்திரா நகர் 3வது தெருவில் வசிக்கும் ஏழுமலை என்பவர், உலக்கையால் நாயை மோசமாக தாக்கியதாக கூறினர். இதையடுத்து உடனடியாக விருகம்பாக்கம் வந்த வேலு, நாயை தூக்கிக்கொண்டு விலங்குகள் நல மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மோசமாக பாதிக்கப்பட்ட, நாயின் இடது கண் அகற்றப்பட்டது. இது தொடர்பாக ப்ளூ கிராஸ் ஜெனரல் மேனேஜர் டான் வில்லியம்ஸின் ஆலோசனைப்படி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஏழுமலை மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS