இன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம்


உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் பொதுமக்களுக்கு 20 ஆயிரம் வேகவைத்த முட்டைகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 14-ம் தேதி இன்று உலக முட்டை தினம் ஆகும். இந்த தினத்தை முன்னிட்டு நாமக்கலில் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் பொதுமக்களுக்கு முட்டை உட்கொள்ளுவது குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு 20 ஆயிரம் வேக வைத்த முட்டைகளை கோழிப்பண்ணையாளர்கள் இலவசமாக வழங்கினர்.

வெளிநாட்டை காட்டிலும் இந்தியாவில் முட்டை நுகர்வோர்கள் குறைவு என்பதால் முட்டை உட்கொள்ளுவது குறித்து பொதுமக்களுக்கு கோழிப்பண்ணையாளர்கள், தனியார் அமைப்பினரும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS