மழையால் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை


நெல்லை மாவட்டத்தில் சூறைக்‌காற்றுடன் பெய்த கனமழையால் பழவூர்‌ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வீணாகின.

பழவூர், கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த சுமார் 30 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. மரம் ஒன்‌றுக்கு 200 ரூபாய் வரை செலவு செய்த நிலையில், இவ்வாறு நிகழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ‌தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட அரசு உதவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சேதம் குறித்து ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS