முதல்வர் ஜெயலலிதா நலம் பெற மண் சோறு சாப்பிடும் அதிமுக மகளிர் அணியினர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுக மகளிர் அணி உறுப்பினர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22- ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் பல சிறப்பு வழிபாடுகளையும், சிறப்பு பூஜைகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் ஜெயலலிதாவின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு மண் சோறு சாப்பிட்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும் கபாலீஸ்வரர் கோவிலில் பால்குடம் எடுத்தும் வழிபாடு செய்தனர். ஜெயலலிதா விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அப்போது அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS