ஆலந்தூர்- பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது


சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பயணிகளின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும் கடந்த ஆண்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

முதற்கட்டமாக, கோயம்பேடு, புறநகர் பஸ்நிலையம் (சி.எம்.பி.டி), அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இந்த சேவை தொடங்கியது.

கடந்த மாதம் 2-வது கட்டமாக சின்னமலையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது,அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது. இதற்காக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

இந்த புதிய சேவை தொடங்கப்பட்டதையடுத்து கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பரங்கிமலைக்கு செல்ல முடியும். ஆலந்தூரில் ஏறி இறங்க தேவையில்லை.

POST COMMENTS VIEW COMMENTS