கலாம் பிறந்தநாளை முன்னிட்டு 25,000 மரக்கன்றுகளை நடும் நடிகர் விவேக்


அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விவேக் தனியார் பள்ளி ஒன்றில் 25,000 மரக்கன்றுகளை நடவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை கடந்த 2010–ம் ஆண்டு நடிகர் விவேக் சந்தித்து பேசியபோது, மரக்கன்றுகள் நடும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு அப்துல்கலாம் விவேக்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வருகின்றார்.

இந்நிலையில் நாளை அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, காலை10 மணிக்கு தனியார் பள்ளி ஒன்றில் 25,000 மரக்கன்றுகளை நடவுள்ளார். இதனை விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS