காவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினார். திமுக எம்எல்ஏ துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பொன்முடி ஆகியோரும் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பான விவசாயிகள் சங்க கூட்ட தீர்மான நகலை நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். மேலும் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவும், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS