தண்ணீர் லாரி மோதி மாணவிகள் உயிரிழப்பு... நிவாரணம் வழங்க விஜயகாந்த் கோரிக்கை


சென்னை கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த 3 மாணவிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகிய மூன்று கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆமணக்குட்டன் உள்பட 4 பேரும் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்து எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுனருக்கு கடும் தண்டை பெற்றுத் தரவும், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கை படி கல்லூரி அருகே வேகத்தடை அமைத்து தர வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS