காஞ்சிபுரம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து


காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 15-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை பகுதியில் இன்று அதிகாலை திண்டிவனம் நோக்கிச் சென்ற கார் ஒன்று நிலைத்தடுமாறி தடுப்பு சுவரை தாண்டி, எதிர்புற சாலையில் சென்று விபத்துக்குள்ளானது.

இதில் சேதமடைந்த காரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மதுரையில் இருந்து வந்த அரசு விரைவு பேருந்து மோதியது. அதைத்தொடர்ந்து அரசு பேருந்து மீது தஞ்சையில் இருந்து வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்துகளில் காயமடைந்த 15-க்கும் அதிகமானோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS