திருவள்ளூர் மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் படுகொலை


திருவள்ளூரை அடுத்த மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் அடையாளம் தெரியாத நபர்களால்‌ வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜை அடையாளம் தெரியாத நபர்கள்‌ வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.தங்கராஜ் நடைபயிற்சி மேற்கொண்டபோது இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்கராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வெள்ளவேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS