திமுக எம்.எல்.ஏ கார் கவிழ்ந்து விபத்து


திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ரகுபதி. இவர் திமுகவை சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ரகுபதி காரில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அப்போது அரிமளம் புதுப்பட்டி அருகே உள்ள பொந்து குழிவிளக்கு என்ற இடத்தில் கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS