பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்காக உயிர்விட்ட தஞ்சை இளைஞர்?


தஞ்சை கல்லணை கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஜவகர் என்ற இளைஞருடையது என அடையாளம் தெரியவந்துள்ளது. கடந்த 10-ம் தேதி காணாமல் போன ஜவகர், நேற்று கல்லணை கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்ததால், அதனை முன்வைத்தே தமது மகன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஜவகரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மரணத்திற்கு முன் ஜவகர் பேசிப் பதிவு செய்ததாக ஒரு பதிவு வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டுள்ளது. இதனை ஜவகரின் நண்பரே பகிர்ந்துள்ளார். அதில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து, சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்பதற்காக தான் உயிர்த்தியாகம் செய்வதாக ஜவகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS