முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி....மேலும் 2 நபர் கைது


முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரப்பிய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் உடல்நலகுறைவு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் முதலமைச்சர் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரப்பிய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.

இன்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாலு என்கிற பாலுசுந்தம். தனியார் நிறுவன ஊழியரான இவர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர். மற்றொருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணிச் செல்வம். இவர் வங்கி ஊழியர் ஆவார்.

POST COMMENTS VIEW COMMENTS