முதலமைச்சர் குணமடைய வேண்டி தீக்குளித்த நபர் உயிரிழப்பு


முதலமைச்சர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி சென்னை தாம்பரத்தில் தீக்குளித்த நபர் உயிரிழந்தார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் உடல்நலகுறைவு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டி மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேர்த்திக் கடன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தாம்பரம் மெப்ஸ் எதிரேயுள்ள சாலையில் திடீரென ஒருவர், உடலில் தீ வைத்துக்கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என கூக்குரலிட்டபடி சாலையில் ஓடினார். அவரை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயர்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், உடலில் தீ வைத்துக்கொண்டவர் தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி சற்குணம் என்பது தெரியவந்தது.

POST COMMENTS VIEW COMMENTS