மின்சார வேலியில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு


கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 5-ஆம் வகுப்பு மாணவன் ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரபயங்கரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்த சாமி. இவரது மகன் ஹரிஷ் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தன் தாயாருடன் வயல் வெளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, கந்தசாமி என்பவரது நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்ட நிலையில் நிலத்தின் வரப்பின் மீது நடந்து வரும்போது காட்டுப்பன்றிக்காக பொருத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வயல் வெளிகளில் மின்சார வேலி அமைக்க அனுமதியில்லாத நிலையில் மின்சார வேலி அமைத்த கந்தசாமி தலைமறைவானார்.

அவர்மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஹரிஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS