பிச்சைக்காரர் சம்பாதித்த 28,000..மீண்டும் அவரிடமே ஒப்படைப்பு


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 28 ஆயிரம் ரூபாய் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பிதர்காடு பகுதியை சேர்ந்த பிச்சைக்காரர் சந்திரன். இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இடுப்பில் கட்டுகட்டாக பணம் கட்டி வைக்கபட்டிருந்ததை கண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அதன் பின் அவரது பணம் 28,000 அம்பலமூலா காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் சந்திரனுக்கு உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து அவரின் பணம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. சந்திரனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால், அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS